அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வி, ஊட்டச்சத்து: மாநிலங்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்

அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வி, ஊட்டச்சத்துகளை அளிக்க வேண்டும் என்று எல்லா மாநிலங்களுக்கும் மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Continues below advertisement

மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அனைவருக்கும் கட்டாயக் கல்வி - Right to Education (RTE) மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு உணவு (PM- Poshan support) ஆகியவை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அனைத்து அரசு, அரசு உதவிபெறும், வீட்டுப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகளுக்கும் இவை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்வி

மத்திய அரசு ஸ்பான்சர் செய்யும் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்வி வழங்க, நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில், இலவச சீருடை, பாடப் புத்தகங்கள், 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்குக் கல்விக் கட்டணம் திருப்பி அளிப்பு, இடைநின்ற பள்ளிக் குழந்தைகளின் மாணவர் சேர்க்கைக்கு (OoSC) சிறப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி தேவையான உதவிகளையும் வளங்களையும் வழங்கி, உயர் தரமான கல்வியை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக இந்த முன்முயற்சி அடையாளம் மற்றும் மதிப்பீட்டு முகாம்கள், உதவிகள், உபகரணங்கள், மற்றும் உதவி சாதனங்கள், போக்குவரத்து, ஸ்கிரைப் உதவித்தொகை, பிரெய்லி புத்தகங்கள், சிறப்புத் தேவைகள் உள்ள பெண்களுக்கான உதவித்தொகை மற்றும் கற்பித்தல்- கற்றல் பொருட்கள் உள்ளிட்ட இலக்கு தலையீடுகள் மூலம் நிதி உதவி வழங்குகிறது.

அனைவருக்கும் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் (PM POSHAN scheme)

ஆரோக்கியமான இந்தியாவை வளர்த்தெடுக்கும் வகையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் பிஎம் போஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உணவு தானியங்கள் குறிப்பிட்ட அளவில் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் இந்தத் திட்டத்தில், மழலையர் பள்ளி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உதவி அளிக்கப்படுகிறது.

சிறப்புக் குழந்தைகளுக்கும்..!

இந்தத் திட்டங்கள் அனைத்தும் அனைத்து சிறப்புக் குழந்தைகளும் அணுகும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளிகள், வீட்டுப் பள்ளிகளில் படிக்கும் சிறப்புக் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டங்கள் செயல்படுகின்றன.

அனைத்து மாநிலங்களும் இதுகுறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தேவையான மாணவர்களுக்கு முன்னெடுக்க வேண்டும் என்று கல்வித்துறைச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola