VIT Entrance Exam: விஐடி பல்கலைக்கழகத்தின் 2026-27 கல்வியாண்டுக்கான பி.டெக். படிப்புகளுக்கான  பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு (VITEEE 2026) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

விஐடி பல்கலை., பொறியியல் நுழைவுத் தேர்வு

விஐடி  பல்கலைக்கழகத்தின் பி.டெக். படிப்புகளுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வு (VITEEE 2026) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விஐடி பல்கலைக்கழகத்தின் 2026-27 கல்வியாண்டுக்கான பி.டெக். படிப்புகளுக்கான  பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு (VITEEE 2026) இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் viteee.vit.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Continues below advertisement

நுழைவுத் தேர்வு விவரங்கள்

பொறியியல் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28 முதல் மே 3-ம் தேதி வரை இரு ஷிப்டுகளில் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் தேர்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,350 ஆகும்.  விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் மாதிரி தேர்வு நடைபெறும்.

இத்தேர்வு மூலம் கேள்வித்தாள் வடிவமைப்பு, புதிய மதிப்பீட்டு முறைகளை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்கள் தேர்வு எழுத ஸ்லாட் பதிவு செய்து தேதி, ஷிப்ட் ஆகியவற்றை தேர்வு செய்து அட்மிட் கார்டு பெறலாம் என விஐடி மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.