நாடு முழுவதும் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 4) வெளியாக உள்ளன. இறுதி விடைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த முடிவுகள் அமைய உள்ளன. சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகளை மாணவர்கள் cuet.nta.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மத்தியக் கல்வி நிறுவனங்களிலும் அரசு கல்வி நிலையங்களிலும் சேர க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இது இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.
மே 13 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்வு
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கான தேர்வு (CUET UG 2025) மே 13 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற்றது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மதியம் 3 முதல் 6 மணி வரையும் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, 250-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, தனியார் இந்திய பல்கலைக்கழகங்கள், தங்களின் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. முன்னதாக தேசியத் தேர்வுகள் முகமை க்யூட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பை அண்மையில் வெளியிட்டது. ( அதைக் காண: https://cdnbbsr.s3waas.gov.in/s3d1a21da7bca4abff8b0b61b87597de73/uploads/2025/07/2025070133.pdf )
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? (NTA CUET UG 2025)
தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.nta.nic.in என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் தோன்றும் "CUET UG 2025 Result" என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
திரையில் புதிய பக்கம் தோன்றும்.
அதில் லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
திரையில் தோன்றும் முடிவுகளை எடுத்து, சேமித்து வைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/