CTET 2024: சிடெட் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

CTET December 2024: 2024ஆம் ஆண்டுக்கான 2ஆவது அமர்வு சிடெட் தேர்வு நாடு முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அக்டோபர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிடெட் தேர்வு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Continues below advertisement

சிடெட் என்னும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்றத் தகுதியானவர்கள். 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பணிபுரியலாம். மத்திய அரசின் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். அதேபோல மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றலாம். 

தேர்வு எப்போது?

2024ஆம் ஆண்டுக்கான 2ஆவது அமர்வு சிடெட் தேர்வு நாடு முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்குத் தேர்வர்கள் அக்டோபர் 16ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் அதே அவகாசத்தில் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் 18ஆவது தேசிய தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. கணினி முறையில் 2 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறுகிறது.

ஒரே நாளில் 2 தாள்களுக்கும் தேர்வு

ஒவ்வொரு தேர்வும் 2.30 மணி நேரத்துக்கு நடைபெறுகிறது. குறிப்பாக டிசம்பர் 1 காலை 9.30 மணி முதல் 12 மணி வரை முதல் தாளும் மதியம் 2.30 முதல் 5 மணி வரை 2ஆவது தாளும் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

தேசிய தகுதித் தேர்வை எழுத பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முறையே ரூ.500 மற்றும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் முதலில் https://ctet.nic.in/apply-for-ctet-dec-2024/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.

* அதில், Apply for CTET Dec-2024 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அதில் விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.

* முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். 

ஆர்டிஇ எனப்படும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை மத்திய அரசு, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்தி வருகின்றன.

https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/09/20240917100.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, கூடுதல் தகவல்களை அறியலாம்.

Continues below advertisement