சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் 21ஆவது பதிப்பிற்கான பதிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விரைவில் தொடங்க உள்ளது. தேர்வுக்குப் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் விண்ணப்பிக்கத் தயாராக இருங்கள். 

Continues below advertisement


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


ஒரு தாளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும், அதே சமயம் இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் ரூ. 1,200 கட்டணம் செலுத்த வேண்டும்.


தேர்வு எப்போது?


இந்த சிடெட் தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. சிடெட் தேர்வு இரண்டு அமர்வுகளில் நடைபெறும்: தாள்- I மற்றும் தாள்- II. இந்த தேர்வு நாடு முழுவதும் 132 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும்.


தேர்வு, பாடத்திட்டம், மொழிகள், தகுதி வரம்பு, தேர்வு கட்டணம், தேர்வு நகரங்கள் மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய விரிவான தகவல் அறிக்கை சிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும். இந்த தகவல் சிடெட் வலைத்தளமான https://ctet.nic.in இல் பதிவேற்றப்படும்


விண்ணப்பிப்பது எப்படி?



  • ஸ்டெப் 1: சிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ctet.nic.in-ஐப் பார்வையிடவும்.

  • ஸ்டெப் 2: 'Apply Online' என்ற இணைப்பைக் கிளிக் செய்து அதைத் திறக்கவும்.

  • ஸ்டெப் 3: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு எண்/ விண்ணப்ப எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.

  • ஸ்டெப் 4: சமீபத்திய ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.

  • ஸ்டெப் 5: டெபிட்/ கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்க்கிங் மூலம் தேர்வு கட்டணத்தைச் செலுத்தவும்.

  • ஸ்டெப் 6: பதிவு மற்றும் எதிர்கால குறிப்புக்காக சம்பந்தப்பட்ட பக்கத்தைப் அச்சிட்டுக்கொள்ளவும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://ctet.nic.in