சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நேரடி முறையில் ஜனவரி மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பேனா - காகித முறையில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 


அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பணிபுரியலாம். தேர்ச்சி பெறுவோர், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். 


நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. விரைவில் தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையக்கள் மற்றும் முக்கியத் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள்,  https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. 


இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் நவம்பர் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


முக்கியத் தேதிகள்


இதில் பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட உள்ளது.



முதல் தாள் ஜனவரி 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. அதேபோல இரண்டாம் தேர்வு மதியம் 2 மணி முதல்  4.30 மணி வரை நடைபெற உள்ளது. 2.30 மணி நேரத்துக்கு நேரடி முறையில் தேர்வு நடைபெறும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://ctet.nic.in/apply-for-ctet-jan2024/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


தொடர்ந்து  https://examinationservices.nic.in/ExamSysCTET/Root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNlnInppgro+sjEnB1eUk+3E என்ற இணைப்பை க்ளிக் செய்து, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 


* இதில், விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, லாகின் செய்து, விண்ணப்பிக்கலாம். 


* முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். 


முழுமையான கையேட்டுக்கு தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2023/11/2023110320.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


கூடுதல் விவரங்களுக்கு https://ctet.nic.in