கல்லூரி பணியிடமாறுதல் கலந்தாய்வு

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் ('டி' பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணைய வழியில் வரும் 15.07.2026 முதல் 24.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கூறுகையில், உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் ('டி' பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம். அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ('டி' பிரிவு தவிர்த்து) 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல்  (General Counselling) 15.07.2026 5 24.07.2026 இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ('டி' பிரிவு தவிர்த்து) www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.