தஞ்சாவூர்: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது.

Continues below advertisement


தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு இரண்டாம் (97.98%), (97.53%), 3 இடமும், கோவை (97.48) 4ம் இடமும், கன்னியாகுமரி(97.01%)5ம் இடமும் பிடித்துள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும் என மொத்தம் 8,779 பேர் 45 தேர்வு மையங்களில் எழுதினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 98.82 சதவீத தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்தது. இதனால் தமிழகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து அசத்தி உள்ளது அரியலூர்.


புதுக்கோட்டை மாவட்டம் 92.55 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்தாண்டை விட 1.24 விழுக்காடு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் 7457 பேர் தேர்வெழுதினர். இதில் 7202பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம்  96.58 ஆகும். மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 8வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 96.44 சதவீதத் தேர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டு மாநிலத்தில் 6வது இடம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தது. இந்த மாவட்டத்தில் 79 பள்ளிகளில் 8 அரசுபள்ளிகள் உள்பட 36 ள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.


பிளஸ்2 துணைத்தேர்வுகளுக்கு வரும்1 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும். கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக சதம் எடுத்து உள்ளனர். தமிழ்பாடத்தில் 99.15 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இயற்பியலில் 99.22 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழில் 135 பேரும், கணிதத்தில் 3022 பேரும் இயற்பியலில் 1125 பேரும் சதம் எடுத்து உள்ளனர்.


தேர்வு எழுதிய மாணவர்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர். இதில் 4 லட்சத்து 05 ஆயிரத்து 472 மாணவிகளும், 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் கூட 100க்கு 100 எடுக்கவில்லை. பிளஸ் 2 தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.47% பேர் கூடுதலாக தோச்சி பெற்றுள்ளனர்.