மேல்நிலை முதலாம் ஆண்டு/ இரண்டாம்‌ ஆண்டு செய்முறைத் தேர்வுகள் குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 


மேல்நிலை முதலாம் ஆண்டு/ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்களுக்கு செய்முறைத்‌ தேர்வுகள்‌ 07.03.2023 முதல்‌ 10.03.2023 வரையிலான நாட்களில்‌ நடத்த வேண்டுமெனத் தெரிவிக்கபட்டிருந்தது. 30.01.2023 அன்று வெளியான செய்திக்குறிப்பின்படி மேற்படி
செய்முறைத்‌ தேர்வுகள்‌ 01.03.2023 முதல்‌ 09.03.2023 வரையிலான நாட்களில்‌ நடைபெறும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டது


இதனைத்‌ தொடர்ந்து மேல்நிலை முதலாம் ஆண்டு/ இரண்டாம்‌ ஆண்டு மாணவர்களது செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக்‌ குறியீடுகள்‌ விவரம்‌ இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ளது.


பள்ளி மாணாக்கருக்கு செய்முறைத்‌ தேர்வு நடத்துதல்‌


1. பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ 20.02.2023 முதல்‌ www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில்‌, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும்‌ கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம்‌ ஆண்டு செய்முறைத்‌ தேர்வுக்கான வெற்று மதிப்பெண்‌ பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.


2. மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதும்‌ பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும்‌ தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத்‌ தேர்வுகளை 01.03.2023 முதல்‌ 09.03.2023 வரையிலான நாட்களில்‌ நடத்தப்பட வேண்டும்‌.


மாற்றுத்‌ திறனாளி பள்ளி மாணாக்கருக்கு (Regular candidates) செய்முறைத்‌ தேர்வு நடத்துதல்‌


1. மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ எழுதும்‌ உடல்‌ இயக்கக்‌ குறைபாடு, பார்வைக்‌ குறைபாடு மற்றும்‌ செவித்திறன்‌ குறைபாடுள்ள மாற்றுத்‌ திறனாளி தேர்வாரகளது விருப்பத்தின்‌ பேரில்‌ செய்முறை தேர்வின்‌ போது ஆய்வக உதவியாளரை‌ நியமனம்‌ செய்ய வேண்டும்.


2. உடல்‌ இயக்கக்‌ குறைபாடு, பார்வைக்‌ குறைபாடு மற்றும்‌ செவித்திறன்‌ குறைபாடுள்ள மாற்றுத்‌ திறனாளித்‌ தோ்வர்களது விருப்பத்தின்‌ பேரில்‌, இயற்பியல்‌, வேதியியல்‌ மற்றும்‌ உயிரியியல்‌ பாடங்களில்‌ மட்டும்‌, செய்முறைத்‌ தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள்‌ (Multiple Choice) அடங்கிய வினாத்தாள் வழங்கி தேர்வில் பங்குபெறச் செய்ய வேண்டும்.


செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்‌ பட்டியலை  மார்ச் 11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


செய்முறைத்‌ தேர்வில்‌ பங்கேற்காதவர்கள்‌ 


செய்முறைத்‌ தேர்வு மையங்களின்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌ / தலைமையாசிரியர்கள்‌, செய்முறை புறத்தேர்வில்‌ பங்கேற்காத பள்ளி மாணவர்களின்‌ பதிவெண்‌ விவரங்களை பாடவாரியாக (அனைத்து செய்முறை பாடங்கள்‌) பூர்த்தி செய்ய வேண்டும்‌. படிவத்தினை செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்‌ பட்டியலுடன்‌ தவறாது (இணைத்து அனுப்ப வேண்டும்‌.


பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌, சம்மந்தப்பட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌


1. செய்முறைத்‌ தேர்வு மையங்கள்‌ அமைத்தல்‌.


2. செய்முறைத்‌ தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட பணியாளர்களை நியமித்தல்‌


* முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌


* புறத்தேர்வாளர்கள்‌ (வேறு பள்ளி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்‌.)


* அகத் தேர்வாளர்கள்‌  (அதே பள்ளி ஆசிரியாகளை நியமிக்க வேண்டும்‌.)


* திறமையான உதவியாளர்கள்‌ (தேவைக்கேற்ப)


* எழுத்தர்


* அலுவலக உதவியாளர்கள்‌, துப்புரவு பணியாளர்‌, குடிநீர்‌ வழங்குபவர்‌ (Waterman)


முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ போதுமான கல்வித்‌ தகுதியுள்ள திறமையான பணியாளர்களை செய்முறைத்‌ தேவு நடத்துவதற்கு நியமனம்‌ செய்ய வேண்டும்‌.


செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்துவதற்கு துறை அலுவலர்களை நியமனம்‌ செய்யத்‌ தேவையில்லை''. 


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.