பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறு கூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகி உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து இன்று வெளியான செய்திக் குறிப்பு:

நடைபெற்று முடிந்த ஜூலை-2026, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி. மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification- பகுதியில் SSLC Examination தலைப்பில் இன்று 28.08.2026 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டு உள்ளது.

Continues below advertisement

இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இப்பொருள் சார்ந்து எழுத்து பூர்வ கோரிக்கை ஏதும் இருப்பின் dgebasec@gmailcom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.09 2026-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.