Continues below advertisement

மாணவர்களுக்கான திட்டங்கள்

மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை வெளிநாடுகளுக்கு இணையாக புதிய புதிய கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் உதவித்தொகை திட்டம் வழங்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம் போன்றவையும் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

அதிநவீன வசதியோடு இலவச லேப்டாப்

இந்த திட்டத்தை செயல்படுத்திடும் வகையில், முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (5.1.2026) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது. அப்போது அரசு பொறியியல். கலை மற்றும் அறிவியல். மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மாணவர்களுக்கும் இலவசமாக Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இந்த மடிக்கணினிகளில் புதிய நவீன தொழில்நுட்பங்கள் வசதிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD , Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பிற்கு உதவும் லேப்டாப்

மேலும் மாணவர்களுக்கு கல்விக்கு மட்டும் உதவி புரியாமல் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், உதவிடும் வகையில் டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, செயற்கை நுண்ணறிவு கருவிகள் (Al Tools), சுயாதீன வேலை (Freelancing) மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் (Digital Marketing), (Graphic Design). குறியிடுதல் (Coding) வலை வடிவமைப்பு (Web Designing), போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை" என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட அரசின் இந்த லேப்டாப் உதவி புரியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.