சென்னை மெட்ரோவில் General Manager (Track)/ Additional General Manager (Track) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் இருப்பதைப்போன்று சென்னையிலும்  மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. குறிப்பாக சென்னை நகரத்தின் பொதுப்போக்குவரத்தில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடிய இத்திட்டத்தின் முதல் கட்ட சேவையினை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே தொடங்கி வைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கென தனித்தனியாக இருப்பு வழிகளில் இயக்கப்பட்டுவரும் நிலையில், இதில் முதல் பெண் ஓட்டுநராக ப்ரீத்தி என்ற பெண் தனது பணியினை தொடங்கினார். குறிப்பாக மெட்ரோவில் பல பிரிவுகளின் கீழ் பலர் பணிபுரிந்துவரக்கூடிய நிலையில் தற்போது மேலும் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. General Manager (Track)/ Additional General Manager (Track) என இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி  என்ன எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்துகொள்வோம்.


சென்னை மெட்ரோவில் வேலை; எழுத்துத் தேர்வே இல்ல.. உடனே அப்ளை பண்ணுங்க..! டீடெய்ல்ஸ் இங்கே


சென்னை மெட்ரோ ரயில் சேவையில் (Chennai Metro Rail service) General Manager (Track)/ Additional General Manager (Track) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


முன் அனுபவம்: அனுபவம்SAG / SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கவேண்டியது அவசியமானதாகும்.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பத்தாம் வகுப்பு சான்றிதழ், கல்விச்சான்றிதழுக்கான நகல், முன்பணிபுரிந்த நிறுவனத்தின் அனுபவச் சான்றிதழ் உள்ளிட்டவைகளை வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் 3 ஆண்டுக்கு  Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர் தகுதிக்கு ஏற்றவாறு 5 ஆண்டுகள் வரை இவர்களது பதவிக்காலம் நீட்டிக்கப்படும்.



இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு எந்தவித தேர்வும், நேர்காணலும் இல்லை எனவும், தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.  மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-07-2021.pdf என பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.