சண்டீகரை சேர்ந்த கஃபி என்கிற 15 வயது ஆசிட் வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளான மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95. 2% சதவீத தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ஆசிட் வீச்சு:
கஃபியின் வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை முதலில் நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. தனது மூன்று வயதில் ஹோலி விளையாடிக் கொண்டிருந்தபோது எந்த காரணமும் அறியாமல் மூன்று நபர்களால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர் கஃபி. இதற்கடுத்த ஆறு ஆண்டுகள் தங்களிடம் இருந்த சேமிப்பு மொத்தத்தையும் வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிந்தார்கள் அவரது பெற்றோர்கள். ஆசிட் வீச்சு தாக்குதலில் தனது பார்வையையும் இழந்தார் கஃபி.
தனது பெற்றோர்களுக்கு கஃபி திருப்பி கொடுப்பதற்கு அவரிடம் இருந்தது ஒன்று மட்டும்தான். கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் 95.2 சதவீதம் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார் கஃபி. பார்வையற்றவர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பயின்ற கஃபி தனது வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்பது தனது லட்சியம் என தெரிவித்தார் கஃபி.
இதுதொடர்பாக, கஃபி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ” எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தோன்றும் ஒரு கட்டம் நம் வாழ்க்கையில் வரும். ஆனால் எனது பெற்றோர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. என்மேல் ஆசிட் வீசியவர்கள் மற்றும் எதற்கும் பிர்யோஜனம் அற்றவள் என என்னை நினைத்தவர்களுக்கு என்னால் சாதிக்கமுடியும் என்று நான் காட்ட நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையில் 6 ஆண்டுகள்:
கஃபியின் மீதான தாக்குதலுக்கு பிறகு அவரது பெற்றோர்கள் டெல்லி,ஹைதராபாத் ஆகிய மாநிலங்களுக்கு கஃபியின் மருத்துவத்திற்கு அலைந்துள்ளார்கள். அப்போது ஹிசாரில் இருந்த அவர்களது குடும்பம் வசித்து வந்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மருத்துவமனையிலேயே கழித்துள்ளார் கஃபி.
கஃபி தனது 8 ஆவது வயதில் முதலாம் வகுப்பு சேர்க்கப் பட்டார் ஆனால் அவரது நிலைக்கு தகுந்த ஒரு சூழல் தேவைபட்டதால் அவரது குடும்பம் சண்டிகர்க்கு குடிபெயர்ந்தனர்.வருமாணத்திற்காக கஃபியின் தந்தை பியுன் வேலை ஒன்றை செய்துவந்தார்.பார்வையற்றவர்களுக்கு பல மாற்று முறைகளின் உதவியால் சொல்லித்தரப்படும் ஒரு கல்வி நிறுவனத்தில் கஃபியை சேர்த்துவிட்டனர் அவரது பெற்றோர்.
2 ஆண்டுகளே சிறை:
கஃபியின் மேல் ஆசிட் வீசியவர்கள் வெறும் இரண்டே ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளிவந்தனர். காவல்துறை சார்பில் போடப்பட்ட வழக்கு வலுவானதாக இல்லாததே இதற்கு காரணம் என தெரிவித்தார் கஃபியின் அப்பா. தனது மகளின் உயிரைக் காப்பாற்றுவதே முக்கியமானதாக இருந்ததால் அந்த சமயத்தில் குற்றவாளிகள் குறித்து எந்த நடவடிக்கையும் தங்களால் எடுக்க முடியாமல் போய்விட்டது என தனது வருத்தத்தைத் தெரிவித்தார் அவர்.