ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வுகளை நடத்த பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியிடப்பட்டுள்ளன. 


நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023- 24ஆம்  கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வு 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வுகளை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


 


* தேர்வு நடைபெறுவதற்கு முன்னால், போதிய அளவில் செய்முறைத் தேர்வு விடைத்தாள்கள்  பெறப்பட்டிருப்பதை பல்ளிகள் உறுதிசெய்ய வேண்டும். 



* பள்ளிகள், தேர்வு அட்டவணை, நடைபெறும் விதம், தேர்வு குறித்த சிறப்பு நடைமுறைகள் இருந்தால் முன்கூட்டியே பெற்றோர்கள்,  மாணவர்களிடம் எடுத்து உரைக்க வேண்டும். 


* கட்டமைப்பு வசதி,  செய்முறைத் தேர்வுக்கான உபகரணங்கள், பொருட்கள்  ஆகியவை ஆய்வகங்களில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 


* சிறப்புத் தேவை உடைய மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் செய்முறைத் தேர்வை வசதியாக எழுதும் வகையில், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  


* மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடியே, தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். 


* அனைத்து செய்முறைத் தேர்வுகள், செயல் திட்டங்கள், உள்ளக  மதிப்பீடுகள் ஆகியவற்றின் மதிப்பீடுகளை அன்றன்றைய தினமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.


* மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்யும்போது, பள்ளிகள், உள்ளக மதிப்பீட்டாளர், வெளியில் இருந்து மதிப்பீடு செய்யும் ஆசிரியர் ஆகியோர்  சரியான மதிப்பெண்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். 


* அதிகபட்ச மதிப்பெண்களை பரிசோதித்துவிட்டு, மதிப்பெண்களை உள்ளீடு செய்யலாம். 


* மதிப்பெண்களை உள்ளீடு செய்த பிறகு அதில் எந்த விதமான மாற்றங்களையும் செய்யக்கூடாது.  
 


* சிபிஎஸ்இ விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருப்பது தெரிய வந்தால், செய்முறைத் தேர்வையே ரத்து செய்யும் அதிகாரம்  சிபிஎஸ்இ வாரியத்துக்கு உண்டு. 


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


10 ,12-ம் வகுப்பு தேர்வுகள்  காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும்இரண்டாவது காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


2024 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை



  • பிப்ரவரி 19 -இந்தி

  • பிப்ரவரி 22- ஆங்கிலம்

  • பிப்ரவரி 27 -வேதியியல்

  • பிப்ரவரி 29 -புவியியல்

  • மார்ச் 4 -இயற்பியல்

  • மார்ச் 9- கணிதம்

  • மார்ச் 12- உடற்கல்வி

  • மார்ச் 15- உளவியல்

  • மார்ச் 18- பொருளாதாரம்

  • மார்ச் 19 -உயிரியல்

  • மார்ச் 22 -அரசியல் அறிவியல்

  • மார்ச் 23- கணக்கியல்

  • மார்ச் 27 -வணிக ஆய்வுகள்

  • மார்ச் 28 -வரலாறு

  • ஏப்ரல் 2- தகவல் தொழில்நுட்பம் 


10ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை



  • பிப்ரவரி 19 -சமஸ்கிருதம்

  • பிப்ரவரி 21 -ஹிந்தி

  • பிப்ரவரி 26 -ஆங்கிலம்

  • மார்ச் 2 -அறிவியல்

  • மார்ச் 4 -வீட்டு அறிவியல்

  • மார்ச் 7 -சமூக அறிவியல்

  • மார்ச் 11 -கணிதம்

  • மார்ச் 13 -தகவல் தொழில்நுட்பம்