சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று காணலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் இணையதளங்களில், டிஜி லாக்கர், உமாங் செயலிகளில் மற்றும் பள்ளிகளில் நேரடியாகவும் தேர்வு முடிவுகளை காணலாம்.
இணையதளங்களில்..
மாணவர்கள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களான
- results.cbse.nic.in
- cbse.gov.in
- results.nic.in
- results.digilocker.gov.in
- umang.gov.in
- cbse.nic.in
ஆகியவற்றை க்ளிக் செய்து அறியலாம்.
இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறியலாம்.
அதேபோல CBSE உடன் இணைக்கப்பட்ட APAAR ID உள்ள மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலை டிஜிலாக்கரில் நேரடியாகப் பெறலாம். அபார் ஐடி இல்லாதவர்கள், அதே போர்ட்டலில் தங்களின் பள்ளிக் குறியீடு, ரோல் எண் மற்றும் 6 இலக்க குறியீட்டைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்க வேண்டியது முக்கியம்.
டிஜிலாக்கரில் முடிவுகளைப் பதிவிறக்குவது எப்படி?
- மாணவர்கள் cbseservices.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ DigiLocker இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில், "Go To Result" என்பதைக் கிளிக் செய்து, "CBSE XIIth Result 2026" என்பதை க்ளிக் செய்து, "View Result" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- உங்கள் மதிப்பெண் பட்டியலைக் காண "Submit" என்பதைக் கிளிக் செய்தால் போதும்.
தேர்வு விவரம்
முன்னதாக 2026ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை 52 நாட்களுக்கு நடைபெற்றன. இந்தத் தேர்வு மொத்தம் 19,967 பள்ளிகளுக்கு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 1780365 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 7573 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் தேர்வை 17,68,968 மாணவர்கள் எழுதினர். இதில் 15,07,109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறைந்த தேர்ச்சி விகிதம்
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.20 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.19 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
துணைத் தேர்வுகள் எப்போது?
தொடர்ந்து துணைத் தேர்வுகள் ஜூலை 15ஆம் தேதி அன்று ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
