CBSE Supplementary Exams 2025: சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கான 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. குறிப்பாக தேர்வு தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தாள்களுடன் தொடங்குகிறது. அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி ஒரு நாள் தேர்வாக நடைபெற உள்ளது. இந்த ஒரே நாளில் அனைத்துத் தாள்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணையை https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Datesheet_X_2025_26062025..pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
அதேபோல பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணையை https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Datesheet_XII_2025_26062025..pdf என்ற அட்டவணையில் இருந்து பெறலாம்.
10 மற்றும் 12 ஆகிய இரு வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன. சில தேர்வுகள் 12.30 மணி வரையும் சில தேர்வுகள் 1.30 மணி வரையும் நடைபெற உள்ளன.
மாணவர்களுக்கான முக்கிய வழிமுறைகள்
- தேர்வு மையத்திற்குள் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
- தேர்வர்கள் தேர்வு மையத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
- ஒவ்வொரு தேர்வின் கால அளவும் தேதித்தாளில் மற்றும் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்வு தொடங்குவதற்கு முன் வினாத் தாளைப் படிக்க மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
- தேர்வர்கள் புதிய அப்டேட்டுகளுக்கு சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2025 தேர்வு முடிவுகள்
2025ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 13 அன்று வெளியாகின. இதில் 12ஆம் வகுப்புக்கான ஒட்டுமொத்தத் தேர்ச்சி சதவீதம் 88.39% ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகமாகும். அதேபோல 10 ஆம் வகுப்புக்கான ஒட்டுமொத்தத் தேர்ச்சி சதவீதம் 93.66% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.cbse.gov.in/