CBSE Hall Ticket: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?

CBSE Hall Ticket 2025: 44 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ள இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு அனுமதிச் சீட்டு வெளியாகி  உள்ளது. 

Continues below advertisement

சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் 2025ஆம் ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் ஆன்லைனில் இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.

Continues below advertisement

சிபிஎஸ்இ வாரிய மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு  பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன. முதன்முறையாக, தேர்வுகள் தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்பே தேதிகள் வெளியிடப்பட்டன.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வுடன் தொடங்குகிறது. அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொழில் முனைவோருக்கான தேர்வுடன் ஆரம்பிக்கிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தொழில்முனைவோருக்கான முதல் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதியும், உடற்கல்வித் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதியும், இயற்பியல் தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதியும் நடைபெறும். வேதியியல் தேர்வு பிப்ரவரி 27ஆம் தேதியும், கணிதம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் மார்ச் 8-ஆம் தேதியும், ஆங்கிலத் தேர்வை மார்ச் 11ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


உயிரியல் மார்ச் 25ம் தேதியும், தகவல் நடைமுறைகள், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மார்ச் 29ம் தேதியும்.  10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 18ம் தேதி முடிவடையும் என்றும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4, 2025ல் முடிவடையும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது. மொத்தம் 44 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு அனுமதிச் சீட்டு வெளியாகி  உள்ளது. தனித்தேர்வர்களும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம். வழக்கமான முறையில் தேர்வை எழுதும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து ஹால் டிக்கெட்டை சீட்டாகப் பெறுவர்.

பெறுவது எப்படி?

  • மாணவர்கள் gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • தேர்வர்கள் Pariksha Sangam Portal என்னும் இணைப்பைத் தேர்வு செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில், Schools (Ganga) என்னும் தெரிவை க்ளிக் செய்யவும்.
  • அதில் Pre- Exam Activities என்னும் பொத்தானைத் தேர்வு செய்யவும்.
  • அதில் அனுமதிச் சீட்டு பக்கம் தோன்றும்.
  • பதிவர் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்ட தேவையான தகவல்களை உள்ளிட்டு, அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது https://cbseit.in/cbse/web/regn/login.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து, நேரடியாகவே ஹால் டிக்கெட்டைப் பெறலாம். 

ஹால் டிக்கெட்டில் என்ன இருக்கும்?

  • தேர்வரின் பெயர்
  • பதிவு எண்
  • பிறந்த தேதி
  • பெற்றோரின் பெயர்
  • தேர்வு எழுத உள்ள பாடங்கள்
  • தேர்வு மையம்
Continues below advertisement
Sponsored Links by Taboola