2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 93.66 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகளை எப்படிப் பார்க்கலாம்? அறிந்துகொள்ளலாம்.  

Continues below advertisement

2024- 25ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 26,675  பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 7837 தேர்வு மையங்களில் எழுதினர்.

93.66 % மாணவ மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 23 லட்சத்து 71,939 பேர் தேர்வை எழுதிய நிலையில், 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 93.66% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.06 சதவீதம் அதிகம் ஆகும். 

Continues below advertisement

மாணவிகளைப் பொறுத்தவரையில், 95 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.63 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் வழக்கம்போல மாணவிகளே மாணவர்களைக் காட்டிலும் 2.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்

கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவீத தேர்ச்சியோடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. விஜயவாடாவும் அதே சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

சென்னை 98.71 சதவீதத் தேர்ச்சியோடு நான்காவது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் குவாஹாட்டி மண்டலம், 84.14 தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. 

தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

* மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று பார்த்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

* டிஜி லாக்கர், உமாங் செயலிகளைக் கொண்டும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

* குறுஞ்செய்தி வாயிலாகவும் இந்தத் தேர்வு முடிவுகளைப் பெற முடியும். 

சிபிஎஸ்இ வாரியத்தின்கீழ் நடந்த 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.