இந்தியாவின் தலைசிறந்த ஐஐஎம் (IIM) கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ (MBA) உள்ளிட்ட முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர்வதற்கான 'கேட் 2026' (CAT 2026 - Common Admission Test) நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான தேர்வு வரும் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Continues below advertisement

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில்  குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

Continues below advertisement

விண்ணப்பக் கட்டணம் 

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 2,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இந்தக் கட்டணம் ரூ. 1,250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

தேர்வு நடைபெறும் முறை


கேட் 2026 தேர்வு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் நவம்பர் 29ஆம் தேதியன்று கணினி வழியில்  நடைபெற உள்ளது. இந்தத் தேர்வானது ஆங்கில மொழித்திறன், தரவுப் பகுப்பாய்வு மற்றும் கணிதத் திறன் என மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

ஐஐஎம் நிறுவனங்கள் மட்டுமின்றி, நாட்டின் பிற முன்னணி தனியார் மற்றும் அரசு மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேரவும் இந்த 'கேட்' தேர்வு மதிப்பெண் கட்டாயம் என்பதால், தகுதியான மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.