81 இளநிலை தொழில்நுட்பாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகம் வெளியிட்டுள்ளது (Bank Note Press, Dewas).
தேர்வு முறை:
தேர்வு முறை 2 கட்டங்களைக் கொண்டது. கணிணி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேர்வு கிடையாது.
காலிப்பணியிடங்கள்:
பணியிடங்கள் | எண்ணிக்கை | கல்வித் தகுதி |
இளநிலை தொழில்நுட்பாளர் (Ink Factory) | 60 | Dyestuff Technology அல்லது சமமான படிப்பில் முழுநேர ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
இளநிலை தொழில்நுட்பாளர் (Printing) | 19 | Printing Trade அல்லது சமமான படிப்பில் முழுநேர ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
இளநிலை தொழில்நுட்பாளர் (Electrical/IT) | 2 | Electrical, Electronics படிப்புகளில் முழுநேர ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஆட்சேர்ப்புத் தேர்வுக்கட்டணமாக ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / மாற்றுத்திறனாளிகள் (ஓஎச்/எச் எச்/விஎச்/மற்றவர்கள்), பெண்கள், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான வயதுவரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்: ஹைதராபாத், பாட்னா, டெல்லி, லக்னோ, கொல்கத்தா என நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். மேலும், விவரங்களுக்கு:
முக்கியத் தேதிகள்: தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 26.02.2022 முதல், 28.03.2022 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான உத்தேசமான தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.
கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், https://bnpdewas.spmcil.com வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், பாஸ்போர்ட் மற்றும் பத்திரம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை அச்சிடும் பொதுத்துறை நிறுவனமான SPMCIL விளங்குகிறது. இதன் கீழ், வங்கி நோட்டு அச்சகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்