பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் வெளியிட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.  


பி.ஆர்க். படிப்பு மொத்தம் 5 ஆண்டு காலப் படிப்பைக் கொண்டது. 4 ஆண்டு காலப் படிப்பையும் ஓராண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியையும் கொண்டது பி.ஆர்க். படிப்பு. இளநிலை பட்டப் படிப்பு மட்டுமல்லாது 3 ஆண்டுகள் பி.ஆர்க். டிப்ளமோ படிப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இளநிலைப் படிப்புகள் தவிர்த்து, எம்.ஆர்க். முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.


நாட்டா எனப்படும் தேசிய கட்டிடக் கலை திறனறித் தேர்வு (National Aptitude Test in Architecture) மூலம் இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்திய ஆர்க்கிடெக்ட் கவுன்சில்  (Council of Architecture) நாட்டா தேர்வை நடத்துகிறது.


பி.ஆர்க். படிப்பில், ஆர்க்கிடெக்சர் டிசைன், தியரி ஆப் ஸ்ட்ரக்சர்ஸ், பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன், பில்டிங் மேனேஜ்மென்ட், ஹிஸ்ட்ரி ஆப் ஆர்க்கிடெக்சர், ஆர்க்கிடெக்சரல் டிராயிங், பில்டிங் சயின்ஸ் அண்ட் சர்வீசஸ், ஒர்க்ஷாப் பிராக்டிஸ் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன.


பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் வெளியிட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.  


இதில் 1,609 இடங்களுக்கு 1,651 பேர் போட்டி போட உள்ளதால், விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு இடம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பி.ஆர்க். படிப்புகளுக்கான கலந்தாய்வில், மாநிலம் முழுவதும் 38 கல்லூரிகள் பங்கேற்க உள்ளன. குறைகளை நிவர்த்தி செய்ய நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு வரும் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  


இதற்கு மொத்தம் 2,491 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பொதுப் பிரிவில் 1,607 தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில், மாற்றுத் திறனாளிப் பிரிவில் 3 தகுதி வாய்ந்த விண்ணப்பங்களும் விளையாட்டுப் பிரிவில் 22 தகுதி வாய்ந்த விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. 


அதேபோல, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 18 பேரின் விண்ணப்பங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 1 விண்ணப்பமும் ஏற்கப்பட்டன. 


நாட்டா,  ஜே.இ.இ. மெயின் தேர்வு மூலம் பி.ஆர்க்


மாணவர்கள் நாட்டா மற்றும் ஜே.இ.இ. மெயின் தேர்வு மூலம் பி.ஆர்க் படிப்புகளில் சேர முடியும். நாட்டா தேர்வை 5 முறை எழுதலாம். இதில் மாணவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த நிலையில் நாட்டா தேர்வு மூலம் 1,114 பேரும் ஜேஇஇ தேர்வு மூலம் 70 பேரும் தேர்வாகி உள்ளனர்.   நாட்டா தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வு ஆகிய இரண்டின் மூலம் தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது. 


டிஎஃப்சி மையங்கள் மூலமாகவே கால் சென்டர்கள் மூலமாகவே மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.  


கூடுதல் விவரங்களுக்கு: www.tneaonline.org