12th Exam: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு 3,302 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.


12ம் வகுப்பு பொதுத்தேர்வு:


.தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த  சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள்  மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். அதில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள், 4 லட்சத்து 13 ஆயிரத்து 99 மாணவிகள் மற்றும் ஒரு பாலினத்தவர் அடங்குவர். இதனை தவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் இன்று தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர்.


3,300 தேர்வு மையங்கள்:


தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஹால் டிக்கெட்:


பொதுத் தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.  இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்  www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக, "online portal" என்ற வாசகத்தினை 'click' செய்து "HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024" என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள user id, password பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தேர்வு விவரங்கள்:


மார்ச் 1 ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 5 ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 11 ஆம் தேதி, வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 15 ஆம் தேதி, கணினி, இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்விகள் நடைபெறுகிறது.


கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உள்ளிட்ட பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன. 


இதனிடையே, வரும் பதினோராம் வகுப்பினருக்கு வருகிற 4ம் தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து 10 வகுப்பினருக்கு வருகிற 26ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.