NEET UG 2025: நீட் இளங்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ஐடி கட்டாயமா? என்டிஏ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ஐடி கட்டாயம் என்று தகவல் வெளியாகின. எனினும் இந்த ஐடி கட்டாயம் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நீட் இளங்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ஐடி கட்டாயமா என்று தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது. இதன்படி, APAAR ஐடி கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு சுருக்கமாக நீட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி கடைசியில் பொதுத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ஐடி கட்டாயம் என்று தகவல் வெளியாகின. எனினும் இந்த ஐடி கட்டாயம் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது என்ன APAAR ஐடி?

APAAR ஐடி (Automated Permanent Academic Account Registry) என்பது இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாணவர்களின் அடையாள முறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். புதிய கல்விக் கொள்கை அம்சத்தின்படி, ஒரு தேசம், ஒரே மாணவர் ஐடி என்ற திட்டத்தின்கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.  

12 இலக்க எண்ணான இந்த ஐடி, மாணவர்களின் மதிப்பெண் அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டம், பட்டயம், சான்றிதழ்கள், கல்வி இணைச் செயல்பாடுகளில் செய்த சாதனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 

முன்பு ஏபிஐ ஐடி என்ற பெயரில் இயங்கிவந்த இந்த ஐ.டி., ஒரு மாணவரின் கல்வி செயல்பாடுகளையும் மதிப்பெண்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கும் ஒரு இடமாகும். இது மாணவர்களுடைய கல்விப் பயணத்தின் விரிவான பதிவை உறுதி செய்யும்.

APAAR ID  கட்டாயம் இல்லை

இந்த நிலையில், ’’APAAR ID  கட்டாயம் இல்லை என்றும் விரைவில் வெளியாக உள்ள தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தகவல்களைப் பயன்படுத்தி இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்’’ எனவும் என்டிஏ தெரிவித்து உள்ளது.

முன்னதாக, செல்லுபடி ஆக்கக்கூடிய மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும்படி நீட் தேர்வர்களுக்கு என்டிஏ கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு ஏபிசி ஐடியை உருவாக்குவது எப்படி? (Step by Step Guide to create ABC ID for Students ) என்பது பற்றிய விளக்கம் https://drive.google.com/file/d/1BU2sgtsYxFGPKbHGhaEYrEq_PRD57c4d/view என்ற பக்கத்தில் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் https://apaar.education.gov.in/ என்ற பக்கத்தில் APAAR ஐடி உருவாக்கம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola