அண்ணா பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி ஆகிய பல்வேறு படிப்புகளுக்கான ஏப்ரல் / மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவர்கள், coe1.annauniv.edu என்ற இணைப்பை க்ளிக் செய்து, செமஸ்டர் தேர்வு முடிவுகளை அறியலாம். விடைத்தாள் நகலைப் பெற செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, https://coe.annauniv.edu/aucoe/pdf/2025_am/Photocopy_Procedure_am25.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விடைத்தாள் நகலைப் பெறலாம்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • தேர்வர்கள் https://coe1.annauniv.edu/home/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில் முகப்புப் பக்கத்தில் உள்ள செமஸ்டர் தேர்வு முடிவுகள் என்னும் இணைப்பை க்ளிக் செய்யவும்,
  • அதில், மாணவர்கள் தங்களின் தேர்வெண்ணை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.
  • தேவைப்பட்டால் வருங்காலப் பயன்பாட்டுக்காக பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
  • தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, விடைத்தாள் நகலைக் காண விரும்பும் மாணவர்கள், தங்களின் கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு செப்டம்பர் 1ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.

மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

  • மாணவர்கள் ஆஃப்லைன் மூலமாக தேர்வு முடிவுகளை அறிய முடியாது.
  • கண்டிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே தேர்வு முடிவுகளை அறிய வேண்டும்.
  • விடைத்தாள் நகலைப் பெற அந்தந்த கல்லூரிகள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: coe1.annauniv.edu