தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வு டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) என்று அழைக்கப்படுகிறது.
டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது முக்கியம். இந்தத் தேர்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
தேர்வு எப்போது?
2026ஆம் ஆண்டி நடைபெறும் டான்செட் தேர்விற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வு மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10 முதல் 12 மணி வரை எம்.சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும். அதேநாள் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்டெக், எம்.இ, எம்.ஆர்க்., எம்பிளான் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நடைபெறுகிறது. அதே நேரத்தில் மே 10ஆம் தேதி சீட்டா படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு இன்று (மார்ச் 16) தொடங்கி உள்ளது. இதற்கு ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் எவ்வளவு?
டான்செட் தேர்வு
பொதுப் பிரிவு- ரூ.1000
எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவு - ரூ.500
சீட்டா தேர்வு (CEETA-PG)
பொதுப் பிரிவு- ரூ.1000
எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவு - ரூ.500
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான விரிவான விவரங்களை https://tancet.annauniv.edu/tancet/Information%20Brochure%202026.pdf என்ற அறிவிக்கையில் காணலாம். https://tancet.annauniv.edu/tancet/ALL.pdf என்ற இணைப்பில் டான்செட் தேர்வு குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
கூடுதல்தகவல்களுக்கு: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)
