அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர மாதாமாதம் ரூ.40,000 உதவித்தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது? என்று காணலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், குரோம்பேட்டை எம்ஐடி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக, பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டிடக்கலை, கலை அறிவியல் பாடங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், தொழில்துறையில் பணியாற்றுவோர், முதுகலை பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் 250 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.40 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
முக்கியத் தேதிகள் இதோ!
இதற்கு மார்ச் 28ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், உரிய சான்றிதழ்களை இணைத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ஆம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
https://cfr.annauniv.edu/jul26/ என்ற இணைப்பில் பாடத் திட்ட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
https://cfr.annauniv.edu/jul26/phd-broucher.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு தகவல்களையும் படித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல https://cfr.annauniv.edu/jul26/ms-broucher.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு தகவல்களையும் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை https://cfr.annauniv.edu/research/academics/index.php என்ற இணைப்பில் பெறலாம்.
தொலைபேசி எண்: 044 22357366
