இந்தியா முழுவதும் அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் இலவச ஏஐ கல்வியை கற்பிப்பதாக ஐஐடி சென்னை அறிவித்துள்ளது.
ஐஐடி சென்னை சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு, இரண்டாம் கட்டமாக இலவச ஏஐ வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10 கடைசித் தேதி ஆகும்.
முன்னதாக இயற்பியல், வேதியியல், கணக்குப் பதிவியல், கிரிக்கெட் பகுப்பாய்வு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பைத்தானைப் பயன்படுத்தி ஏஐ/ எம்எல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. 25 முதல் 45 மணி நேரத்துக்கு இலவசமாகப் படிப்பு வழங்கப்பட்டது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இந்த ஏஐ கோர்ஸில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம். கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய AI அறிவு மற்றும் நடைமுறை கருவிகளைப் பெற ஆசிரியர்களும் ஆர்வமுள்ள ஆசிரியர்களும் இந்தப் பாடநெறிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பாடநெறிகள் AI கல்வியை உள்ளடக்கியதாகவும், அனைத்துத் துறைகளிலும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இவை பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல், வணிகம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த கற்பவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை pmu-sp@swayam2.ac.in என்ற இணைப்பில் காணலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்ட 6 படிப்புகளிலும் சேர https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து ஐஐடி சென்னை சார்பில் கூறும்போது, "இந்த கோர்ஸில் சேர AI அல்லது கோடிங்கில் முன் அனுபவம் தேவையில்லை. அடிப்படை டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் போதுமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://swayam-plus.swayam2.ac.in/