வீடில்லாமல், தெருத் தெருவாக சுற்றித் திரியும் தெரு நாய்களை கணக்கெடுக்க பள்ளிக்கு ஓர் ஒருங்கிணைப்பு அலுவலர் (ஆசிரியர்) நியமிக்கப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சியின் மாநகராட்சி கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Continues below advertisement

மாநகராட்சிக்கு தெரியப்படுத்துதல்

மாநகராட்சிப் பள்ளிகள் சார்பில் வீடில்லா நாய்களை முறையாகப் பிடித்து அவைகளுக்கு உரிய தங்குமிடத்திற்கு கொண்டு சென்று பராமரித்தல் மற்றும் பள்ளிகளில் சுற்றி திரியும் வீடில்லா நாய்கள் குறித்த தகவல்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்துதல் சார்பாக கோயம்புத்தூர் நகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி வழங்கப்படும் அறிவிப்பின்படி கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டும் பள்ளிகள், கல்லூரி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்கள் போன்ற இடங்களில் உள்ள வீடில்லா நாய்களை முறையாக பிடித்து அவைகளுக்குரிய தங்குமிடத்திற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட வேண்டும்.

Continues below advertisement

ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நிலையங்களுக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்

மாநகராட்சி பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் ஏற்படுத்தி வீடில்லா நாய்கள் உள்ளே புகாதவாறு பாதுகாத்தல், சரியான முறையில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுதலை உறுதி செய்தல், மேலும் சுற்றித் திரியும் வீடில்லா நாய்கள் குறித்த தகவல்களை மாநராட்சிக்கு தெரியப்படுத்துதல், இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கு ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நிலையங்களுக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது கோரப்படும் தகவல்களை வழங்கும் பொருட்டு பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இ மெயில் முகவரிக்கு அனுப்ப உத்தரவு 

இந்தத் தகவல்களை achocoimbatore@gmai.com என்ற இ- மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களே தங்கள் ஒருங்கிணைப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சியின் மாநகராட்சி கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.