காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!

10ஆம் வகுப்பு விடைத் தாளில் "தயவுசெய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள், என் காதல் உங்கள் கைகளில் உள்ளது" என்று மாணவர் எழுதி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விநோதமான கோரிக்கைகளை முன்வைத்த மாணவர்கள்
கர்நாடக மாநிலத்தின் பெலஹாவி மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதில் பல்வேறு மாணவர்கள் தங்களைத் தேர்ச்சி பெறவைக்கக் கோரி, விநோதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
Just In




குறிப்பாக ஒரு மாணவன் தனது விடைத் தாளில் 500 ரூபாய் வைத்து, அதில் எழுதியிருந்த வார்த்தைகள் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளன.
டீ செலவுக்காக 500 ரூபாய்
இதுதொடர்பான வெளியான செய்திகளின்படி, விடைத் தாளில் சம்பந்தப்பட்ட மாணவர், நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடர முடியும். டீ செலவுக்காக 500 ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்ச்சி பெற்றால் மட்டுமே காதல்
இன்னொரு மாணவர், தேர்வுத் தாளில், "நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடருவேன்" என்று கூறி உள்ளார்.
மற்றொரு மாணவரும் இதேபோன்ற வேண்டுகோளை விடுத்தார், ஆனால் ஒப்பந்தத்தை இனிமையாக்க 500 ரூபாயைச் சேர்த்தார். "தயவுசெய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள், என் காதலே உங்கள் கைகளில்தான் உள்ளது" என்று மாணவர் விடைத்தாளில் எழுதி இருந்தார்.
இதுதொடர்பான நெட்டிசன்களின் பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
35 சதவீத மதிப்பெண்களைக் கூடப் பெற முடியாதா?
கர்நாடக மாநிலத்தில் 2025ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,96,447 மாணவர்கள் எழுதி இருந்தனர். பொதுவாக எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35 % மதிப்பெண்கள் தேவை. ஆனால் அதைக் கூடப் பெற முடியாமல் இதுபோன்ற லஞ்ச முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது, கற்பித்தலிலும் கற்றலிலும் உள்ள சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்"