கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 22 தொடக்கப் பள்ளிகள், 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 40 அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ சட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் தலா 5 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.


எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன பள்ளிகள்?


திருப்பூர் - 6 


நீலகிரி- 5 
தேனி-5
திண்டுக்கல்- 4
தேவகோட்டை 4 
திருவாரூர் 2 
லால்குடி - 2
வேலூர்- 2
தட்டால கொளத்தூர்- 1
திருவள்ளூர் - 1 
பர்கூர் - 1
புள்ளம்பாடி- 1 
மயிலாடுதுறை- 1
ஆரணி- 1 
நாட்றாம்பள்ளி -1
கெலமங்கலம்-1 
தர்மபுரி- 1 
திருவண்ணாமலை- 1


முன்னதாக, இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறையிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகள் மூடப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கண்ட 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழகத்தில் பள்ளிக்‌ கல்வித்‌துறையின்‌ கீழ்‌ ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும் மேல்நிலைப்‌ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


திறமையான ஆசிரியர்கள் இருந்த போதிலும் தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் போதாமை, குறைந்து வந்த உள் கட்டமைப்பு வசதிகள், தனியார் பள்ளிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இந்த சூழலில், அனைத்து வகையான அரசுப் பள்ளிகளையும் சேர்த்து, 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  


குறிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் 22 தொடக்கப் பள்ளிகள், 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்று 40 அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் தலா 5 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.


எனினும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை அடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: ITI Admission: ஐடிஐ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி: எப்படி?- முழு விவரம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண