10th public exam: கலக்கத்தில் கல்வித்துறை; மொழி பாடத்தில் இவ்வளவு பேர் ஆப்சென்டா...?

முதல் நாள் தேர்வான தமிழ் பாட தேர்வில் 23 ஆயிரத்து 743 பேர் எழுதினர். 364 மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கு வரவில்லை.

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 23 ஆயிரத்து 743 மாணவ, மாணவியர்கள் எழுதினர்.

Continues below advertisement

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். மேலும், தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 மையங்களும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 தேர்வு மையங்கள் என மொத்தம் 126 தேர்வு மையங்களில், 362 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 828 மாணவர்களும், 12 ஆயிரத்து 279 மாணவிகள் என 24 ஆயிரத்து 107 பேர் தேர்வு எழுதுகின்றனர். நேற்று காலை 10:00 மணிக்கு தமிழ் பாட தேர்வுடன் பொதுத் தேர்வு தொடங்கியது. அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு பணியில் 128 முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்கள், 176 பறக்கும் படை குழுவினர், 1,970 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் 535 பேர், அலுவலக பணியாளர்கள் 250 உள்ளிட்ட 3240 பேர் ஈடுபட்டனர். 535 மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு மையங்களை, தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குனர் குழந்தைராஜன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் மற்றும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் குழுவினர், திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 176 பறக்கும் படையினரும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

முதல் நாள் தேர்வான தமிழ் பாட தேர்வில் 23 ஆயிரத்து 743 பேர் எழுதினர். 364 மாணவ, மாணவியர்கள் தேர்விற்கு வரவில்லை.

Continues below advertisement
Sponsored Links by Taboola