அரசு மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


9ஆம் வகுப்பு முடித்து 10ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்புவார்கள். அவ்வாறு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு, கல்வித்துறையின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.


கல்வித்துறை அறிவிப்பு,



  • 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும். 

  • மாவட்டத்துக்கு 240 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 120 பேர் மாணவர்களும் 120 மாணவிகளும் என தேர்வு செய்யப்படுவர்.

  • இவர்களுக்கு தேர்வு மார்ச் மாதம் 4ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி 12.00 மணிக்கு முடிவடையும்.

  • ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் இருந்து நுழைவுத் தேர்வு எழுத தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பட்டியலை கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.  

  • தேர்வு மையத்தின் தலைவராக மூத்த தலைமை ஆசிரியரும் தேர்வு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 

  • தேர்வு நடக்கும் இடத்திற்கு தேர்வு எழுதும் மாணவர்களை அழைத்து வரும் முழுப்பொறுப்பும் பள்ளித் தலைமை ஆசிரியர்களையே சேரும். 

  • எனவே, இதற்கென தனி ஆசிரியரை நியமித்து, அவர்கள் தேர்வர்களை அழைத்து வருவதையும், தேர்வு முடிந்து பின்னர் அழைத்துச் செல்வதையும் உறுதி செய்ய வேண்டும். 

  • மேலும்,  இந்த தேர்வு OMR தாளில் விடைகளை குறிக்கும் முறையில் நடைபெறும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி OMR  விடைத் தாள்கள் வழங்கப்படும். அதேபோல், விடைத்தாள்கள் EMIS-ல் பதிவு செய்யப்பட்ட பெயருடன் தான் இருக்கும்.  

  • எனவே, தேர்வு எழுதும் தேர்வர்கள் பள்ளி பெயரிடப்பட்டு சீல் வைக்கப்பட்ட EMIS அடையாள அட்டையும், புகைப்படமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

  • EMIS அடையாள அட்டை மாணவர்களிடம் உள்ளதா என பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்த பின்னர்,  அவர்களை நுழைவுத் தேர்வுக்கு அனுப்ப வேண்டும். 


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்து செயல்படுபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.