தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலை டிசம்பர் 05ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச்/ஏப்ரல் 2027 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, பத்தாம் வகுப்பிற்கு 14.10.2026 முதல் 31.10.2026 வரையிலும், மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 22.10.2026 முதல் 31.10.2026 வரையிலும் இணையதளம் வாயிலாக மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், புதிய பள்ளிகள் பதிவு செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணம்/TML கட்டணம் செலுத்துதல் தொடர்பான வழிமுறைகளை அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடிதங்கள் வாயிலாக மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான கால அவகாசம் நவம்பர் 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

தற்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் நவம்பர் 27 பிற்பகல் முதல் டிசம்பர் 05ம் தேதி வரையிலான நாட்களில் www.dgeapp.tnschools.gov.in என்ற முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி மார்ச்/ஏப்ரல் 2027 பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Continues below advertisement

பள்ளித் தலைமையாசிரியர்கள்

பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்த பிறகு, தமது பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கர்களும் பெயர்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்து, இவ்விணையதளத்திலேயே உள்ள உறுதிமொழிப் படிவத்தினை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

பதிவிறக்கம் செய்யப்படும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின், அத்திருத்தங்களை பின்னர் அறிவிக்கப்படும் நாட்களில் மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், புகைப்படம் ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் பள்ளிகளிலேயே மேற்கொள்ளவும், இனம், பயிற்றுமொழி, பாடத்தொகுப்பு மற்றும் பள்ளியின் பெயரில் திருத்தங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளவும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.