சென்னை மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் youtuber இர்ஃபான் கார் விபத்தில் சிக்கியது.


இஃப்ரான் வியூஸ்  ( irfan view Youtube channel  ) 


சமூக வலைதளங்களில், பல உணவுகளை ரிவ்யூ செய்யும் யூடியூப் சேனல்கள் இருந்தாலும், சில youtube சேனல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் என்பது, இருந்து வருகிறது. அந்த வகையில், யூடியூபில் " இஃப்ரான் வியூஸ் " என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்பவர் youtube சேனல் நடத்தி வருகிறார்.  சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான யூடியூப் சேனலாக இந்த சேனல் இருந்து வருகிறது. உணவு குறித்த வீடியோக்கள் போடுவதால், இவருக்கு தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இவர் யூடியூபில் வைத்திருக்கும் சேனலுக்கு, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் இருந்து வருகின்றனர்.





 

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  ( Irfan Car Accident )

 

சமீபத்தில் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது மனைவியுடனும் வெளியே செல்லும், வீடியோக்களிலும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் இர்பான். இந்த நிலையில் தென் மாவட்டத்திலிருந்து, முகமது இர்பான், தனது பென்ஸ் காரில் சென்னை நோக்கி நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தபோது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மீது பென்ஸ் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். 



 

போலீசார் விசாரணை ( Police )

 

இந்த நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இர்ஃபானின் பென்ஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி காட்டாங்குளத்தூர், முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பத்மாவதி என தெரியவந்தது. இவர் சென்னை பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. வாகனத்தை இர்பானின் ஓட்டுனர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில்  போக்குவரத்து புலனாய்வு போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

 


இழுபறி 

 

இதற்கிடையே, இர்பானின் காரை பறிமுதல் செய்த தாம்பரம்  போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போலீசார் உரிய ஆவணங்களை வழங்காததால், பரிசோதனை செய்யாமலேயே ஆர்டிஓ அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இர்பான் கார் விபத்து சம்பவத்தில் சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் அசாருதீன் என்பவர் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசில் தாமாக சரண் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், காரை ஓட்டி வந்தது அஸாருதீன்தானா என்கிற கேள்வியும் எழுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண