லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு

அந்தப் பெண் அந்த இளைஞருடன் செல்ல மறுத்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Continues below advertisement

24 வயது காதலன் தற்கொலை செய்து கொண்டதால், 17 வயது சிறுமியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Continues below advertisement

அந்தப் பெண் அந்த இளைஞருடன் செல்ல மறுத்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலனின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்.

 24 வயது இளைஞன் ஒருவர் நைகான் கிழக்கின் கோல்ஹி கிராமத்தில் உள்ள ஆஷா நகரில் வசித்து வந்தார். அதேபோல் 17 வயது சிறுமி ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதலன் 17 வயது சிறுமியிடம் அவரின் பெற்றோரை விட்டு வருமாறும், தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்குமாறும் வலியுறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அந்த பெண் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “அவரது குடும்பத்தினர் அவரை ஆறுதல்படுத்த முயன்றனர், ஆனால் அவர் ஆறுதல் அடைய முடியவில்லை. அவரது தற்கொலைக்கு அவர் பொறுப்பேற்று, குற்ற உணர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரும் தற்கொலை செய்துகொண்டார்” எனத் தெரிவித்தனர்.

17 வயது சிறுமி சனிக்கிழமை தனது காதலனின் வீட்டிற்குச் சென்றதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் சிறுமியை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இருப்பினும், வாக்குவாதத்திற்குப் பிறகு, சிறுமி அங்கிருந்து சென்றுள்ளார்.

அன்றைய இரவே காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுத்த நாள் காலை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காதலன் இறந்த மறுநாளே அந்தப் பெண் அதே முறையில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

Continues below advertisement
Sponsored Links by Taboola