திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கலேந்திராவைச் சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஜி மங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் திவ்யா ஜெயஸ்ரீ (20) என்பவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீ மங்களம் பகுதியில் உள்ள பணிபுரியும் நிர்வாகத்தில் தங்கி இருக்கும் அறைக்கு பிரதீப் அழைத்து வந்துள்ளார்.
காதலி கொலை
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் காதலி திவ்யா ஸ்ரீயை கத்தியால் சரமாரியாக குத்தி துடிக்கதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வேகமாக அறையை விட்டுசென்ற பிரதீப் ஓசூர் பாகலூர் சாலையில் எதிரே வந்த லாரியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையும் படிங்க: என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
லாரியில் பாய்ந்த பிரதீப்
இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீபை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரதீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதனிடையே கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யா ஜெயஸ்ரீ உடலையும் கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
