மும்பையில் விமானப் பயணம் மேற்கொண்ட ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவர் எழுதிய கடிதத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


பயணம் செய்வதென்றால் யாருக்கு தான் பிடிக்காது. தரை, வான், நீர் என பயணங்கள் பலவாயினும் எல்லோரும் எல்லா வகையான பயணங்களையும் மேற்கொள்ளாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் என்றைக்காவது ஒருநாள் அத்தகைய பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் அதுக்காகவே பணம் சேமித்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். 


அந்த வகையில் முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பாலத்தில்25 வயது இளைஞர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். 


இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. 


அந்த வகையில் தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த  லக்ஷ்மி சைத்ரம் யாதவ் என்பது தெரிய வந்தது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சத்தீஸ்கரில் இருந்து விமானம் மூலம் அவர் மும்பை வந்துள்ளார். மும்பை போன்ற போக்குவரத்து வசதிகள் நிறைந்த மெட்ரோ நகருக்கு சைத்ராம் வருவது இதுவே முதல்முறையாக இருந்துள்ளது


மேலும் விமானத்தில் இதுவரை பயணம் செய்யாத சைத்ராம் நீண்ட நாட்கள் முயற்சிக்குப் பிறகு முதல் முறையாக விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அதுவே தனது கடைசி ஆசை என கடிதத்தில் சைத்ராம் எழுதியுள்ளார். ஆனாலும் இது கொலையா? இல்லை தற்கொலையா? என்ற பாணியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.