கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜினாதேவி இவர் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார் இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வீட்டு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை சம்பந்தமாக அண்ணாமலை நகர் காவல் துறையினர் விசாரணையில் அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் நான் குளிக்கும் பொழுது படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்ததாகவும் இதனால் வாழ முடியவில்லை என கூறி எழுதி இருந்த நிலையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.




 

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி தாலுக்கா நயினார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் எம்எஸ்சி முதலாமாண்டு கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் படித்துக் வருகிறார். மேலும் லோகநாதன் சொந்த ஊரில் அஜினாதேவி அவரது தாய்மாமன் வீட்டில் தங்கி படித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அஜினாதேவிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவரை மாப்பிள்ளை பார்த்ததால் லோகநாதன் உடன் பேசியதை நிறுத்தி உள்ளார். 



 

இதனால் கோபம் அடைந்த லோகநாதன் என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என செல்போனில் பேசி உள்ளார். அதற்கு அஜினாதேவி நான் ஒன்றும் செய்ய முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன் வாட்ஸப் கால் மூலம் அஜினாதேவி பேசியபோது ஆடைகளை கலைத்து பேசிய காட்சிகளை லோகநாதன் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி லோகநாதன் என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டால் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ஆடைகள் இல்லாமல் பேசிய வீடியோ புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விட்டுவிடுவேன் என அஜினாதேவியை மிரட்டி வந்துள்ளார்.

 



 

இதனால் மன உளைச்சலில் இருந்த அஜினாதேவி மாட்டுக் கொட்டகையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. குளிக்கும்போது படம் எடுத்து மிரட்டி வந்ததாக மொட்டையாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்று நாளில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்கொலைக்கு தூண்டுதல் 306 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.