மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்த காரணத்தால் மகன்களை கொன்று கணவன் தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் சீனவாசப்பூர் தாலுகாவில் சீகேஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நாராயணசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பவன், நிதின் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதனிடையே லட்சுமிக்கும், சீகேஹள்ளியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த நாராயணசாமி தனது மனைவியை கண்டித்துள்ளார். 


ஆனால் லட்சுமி அந்த உறவை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இது ஒருகட்டத்தில் முற்றிப்போகவே மனமுடைந்த நாராயணசாமி விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி தனது மனைவி லட்சுமி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து தனது இரு மகன்களையும் கொன்று உடல்களை தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர் தானும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வெளியே சென்ற லட்சுமி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது கணவன், மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். 


சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின்  உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோலார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக திருமணத்தை மீறிய உறவால் மகன்களை கொன்று நாராயணசாமி தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)