மேலும் அறிய

மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

Delhi Horror: தலைநகர் டெல்லில் பேருந்தில் வைத்து இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Delhi Horror: தலைநகர் டெல்லில் பேருந்தில் வைத்து இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை:

கடந்த திங்களன்று தலைநகர் டெல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் ஏசி பேருந்து ஒன்றில், இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ராணி பாக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் வைத்து, குற்றவாளிகள் இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.  பிதாம்புராவில் உள்ள ஒரு குடிசைப் பகுதியைச் சேர்ந்த அந்த பெண்,  மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோர சம்பவம் - நடந்தது என்ன?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, கடந்த மே 11ம் தேதி இரவு 30 வயதான அப்பெண் வழக்கம் போல் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ​​சரஸ்வதி விஹாரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு படுக்கை வசதி கொண்ட பேருந்து வந்து நின்றுள்ளது. அந்த பேருந்தின் கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு நபரிடம் அந்தப் பெண் நேரம் கேட்பதற்காக அணுகியுள்ளார். அப்போது அந்த நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து பேருந்துக்குள் ஏற்றியுள்ளார். பின்னர், பேருந்தானது நங்லோய் நோக்கி ஓட்டிச் செல்லப்பட்டு, அங்கு ஒரு மறைவான பகுதியில் வாகனத்தை நிறுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். தொடர்ந்து பேருந்து நகரை சுற்றி 2 மணி நேரம் வலம் வந்ததாகவும், வேறு சிலருக்கும் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

3 குழந்தைகளுக்கு தாய்

காவல்துறை தகவல்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. அவருக்கான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பத்தில் தொடர்புடைய பேருந்தானது சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து, ஃபரிதாபாத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள,  ராயல் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனத்தினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு நிர்பயா?

கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் கடந்த 2020ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும், பல்வேறு கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகும் மீண்டும் ஒரு பெண் தலைநகர் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம் ஆத்மி கண்டனம்

கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜக அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சமூகவலைதள பதிவில், “டெல்லி காவல்துறையிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதன் தலைவரான துணைநிலை ஆளுநர், நாம் அவருடைய சோலே பத்தூரே மற்றும் ஜிலேபி சாப்பிடும் காணொளிகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். மூன்று வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிற்காக நம்மைச் சந்திக்க முயன்றபோது கூட நேரம் ஒதுக்காதவர்" என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget