மேலும் அறிய

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.. பின்னணியில் பெரும் சதி? - சிக்கிய பெண் பரபரப்பு வாக்குமூலம்!

திருச்சி மாவட்​டம் மகாத்மா காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் சிக்கிய பெண் மிகப்பெரிய மோசடியை கையாண்டுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் சிக்கிய பெண் மிகப்பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 

திருச்சி மாவட்​டம் துறையூரைச் சேர்ந்​த விக்னேஷ் என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுகன்யா இரண்டாவது பிரசவத்திற்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சுகன்யாவை பார்த்துக் கொள்ள அவரது உறவுக்கார பெண் பிரேமா இருந்துள்ளார். அப்போது அவரின் பக்கத்து படுக்கையில் மீனாட்சி என்ற பெண் தான் 7 மாத கர்ப்பம் என சொல்லி ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக சிகிச்சைப் பெற்று வருவதாக சொல்லி நட்பாகியுள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை சுகன்யாவின் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு வருவதாக கூறி குழந்தையை வாங்கிச் சென்ற மீனாட்சி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முழுக்க உஷார்படுத்தப்பட்டது. 

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மீனாட்சி குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோ மூலம் அங்கிருந்து சென்றது தெரிய வந்தது. அதேசமயம் அவர் கொண்டு வந்த கட்டை பையை மறந்து மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றிருந்தார். போலீசார் அதனை சோதனையிட்டபோது அதில் மீனாட்சியின் ஆதார் கார்டு இருந்தது. அதில் இருந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர். 

அதேசமயம் மீனாட்சியின் செல்போன் எண் மூலம் அவரின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது. அதனையடுத்து காணாமல் போன குழந்தை அவரிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீனாட்சியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, “மீனாட்சிக்கு திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாததால் அந்த ஏக்கத்தில் இப்படி ஒரு சம்பவத்தை செய்து விட்டேன்” என தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதனை போலீசார் நம்ப மறுத்து துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வந்தது. 

மீனாட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்பவரை முதலாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஆண்,பெண் என இரு குழந்தைகள் பிறந்தனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சரவணனை விட்டு மீனாட்சி பிரிந்தார். இரு குழந்தைகளையும் திருச்சியில் இருந்த தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, காட்டூரைச் சேர்ந்த விஜய் என்பவரை இரண்டாவதாக மீனாட்சி திருமணம் செய்துள்ளார். 

இந்த உறவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 3வதாக ராம் என்பவரை அவர் திருமணம் செய்ய அடுத்த சில ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். நான்காவதாக தற்போது சுரேஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். மாமியார் தன் மீது பாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பமாக இருப்பதாக கூறி மீனாட்சி ஏமாற்றியுள்ளார். வயிற்றில் துணியைக் கட்டி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றியிருக்கிறார். வளைகாப்பும் நடைபெற்றுள்ளது. 

பிரசவ தேதி நெருங்கியதாக காட்டிக் கொண்ட மீனாட்சி திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக நோயாளி போல வலம் வந்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை குழந்தையை திருடி விட்டு நேராக தனது தாயிடம் சென்று ஆசி வாங்கி விட்டு மாமியாரை சந்திக்க கார் மூலம் தம்மம்பட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் தான் மீனாட்சி போலீசாரின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரின் கணவர் சுரேஷ் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் 5 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
Embed widget