தற்கொலை செய்துகொள்ள போவதாக கணவன்.. தகராறில் கணவரைக் கொன்ற பெண் கைது..

திருச்சியில் தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வர மறுத்ததால் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்

Continues below advertisement

திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மகன் தினேஷ் ராஜசேகரன்(வயது 28). இவர் தென்னூர் பட்டாபிராமன் சாலையில் இருசக்கர வாகன ஷோரூமில் கலெக்‌ஷன் முகவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லாவண்யா (26). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தினேஷ் ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மனைவியை அடிக்கடி மிரட்டி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வரும்படி தினேஷ் ராஜசேகரனிடம், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் தினேஷ் ராஜசேகரன் வாழைப்பழம் வாங்காமல் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த தினேஷ் ராஜசேகரன் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement



இதனை தொடர்ந்து தனது கணவரிடம் இருந்து லாவண்யா கத்தியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் கத்தியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவரும் கத்தியை பிடித்துக்கொண்டு மல்லுகட்டியுள்ளனர். அப்போது, லாவண்யா கத்தியை பறித்த வேகத்தில், தனது கணவரின் நெஞ்சில் வேகமாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் தினேஷ் ராஜசேகரன் மயங்கி சரிந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


மேலும் கொலை வழக்கு இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், தினேஷ்ராஜசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவரை கத்தியால் குத்திய லாவண்யா மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் (கொலை) கீழ் வழக்குப்பதிவு செய்து, லாவண்யாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 
Continues below advertisement
Sponsored Links by Taboola