புதுச்சேரி: வாட்ஸ் ஆப்களில் வரும் மொபைல் செயலிகளை பதவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement


எச்சரிக்கை மற்றும் அவசர செய்தி


தற்போது நமது வாட்ஸ் அப் குழுக்களிலோ அல்லது தெரிந்த நபர்களிடமிருந்தோ சரவணா ஸ்டோர்ஸ் வணிக அரசின் உதவி திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள் என்ற பெயரில் போலியான லிங்க் ஆனது பரிமாறப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று பதிவுகளை பதிவிட்டாலோ உங்களது பணத்தினை இழக்க நேரிடும்.


Whatsapp கணக்கும் இணைய வழி குற்றவாளிகளால் Hack செய்யப்படுகிறது


 அதனால் யாரும் இவ்வாறு வரக்கூடிய லிங்கினை தொட வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை செய்யப்படுகிறது.மேலும் இந்த லிங்கின் பின்விளைவுகள் பற்றி அறியாமல் யாருக்கேனும் ஷேர் செய்வது தவறாகும். இந்த லிங்கினை தொடுவதால் உங்களுடைய Whatsapp கணக்கு Hack செய்யப்படுவதுடன் மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய Whatsapp கணக்கும் இணைய வழி குற்றவாளிகளால் Hack செய்யப்படுகிறது.


வங்கி கணக்கில் உள்ள தொகை உங்களுக்கு தெரியாமல் திருடப்படும்


மேலும் சமூக வலைத்தளத்தில் இது போன்று பரவும் SBI YONO Updateஅல்லது Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan Applicationகளை Install செய்து உங்களுடைய தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை உங்களுக்கு தெரியாமல் எடுக்க படலாம்.


போலியான லிங்குகளையோ open செய்ய வேண்டாம்!


எனவே பொதுமக்கள் யாரும் சமூக வலைத்தளத்தில் இது போன்று போலியான லிங்குகளையோ அல்லது APK Applicationகளையோ Install செய்து அதில் கேட்கும் தகவல்களை தந்து பணத்தை ஏமாற வேண்டாம் என்றும் மேலும் இதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் புதுச்சேரி இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலையம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


சைபர்கிரைம் புகார் அளிப்பது எப்படி ?


மேற்கூறிய தகவல் கிடைக்க பெற்றால் அவற்றை cybercrime.gov.in எனும் வலைதள முகவரியில் உள்ள Report Suspect optionல் பதிவேற்றி புகார் செய்யலாம். மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.inஐ பயன்படுத்தவும்.