ஒரே நேரத்தில் டேட்டிங் செய்த நான்கு பெண்களால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. அந்த பெண்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் விஷம் குடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ஜோர்பட்கி கிராமத்தைச் சேர்ந்த சுபமோய் கர் என்ற இளைஞர் தனது பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் நான்கு பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பழகி வந்தார். இதனை அறிந்துக்கொண்ட நான்கு பெண்களும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு, தாங்கள் எப்படி அந்த சுபமோய் கரியால் ஏமாற்றப்பட்டார் என்பதை அறிந்து கொண்டனர். அவரை கையும் களவுமாக பிடிக்க பெண்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், காளி பூஜை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கர் வேலைக்குச் செல்லத் தயாரானபோது, நான்கு பெண்கள் அவரைச் சுற்றி வளைத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை தொடர்ந்து சண்டை ஏற்பட்டு, அந்த பெண்களின் விவாதத்தை தாங்க முடியாமல் சுபமோய் தனது அறைக்குள் சென்று விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மதபங்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கூச் பெஹார் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நான்கு பெண்களில் யாரும் புகார் அளிக்கவில்லை. தற்கொலை முயன்ற நபர் ஆபத்தில் இல்லை என்றும் அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்