விழுப்புரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டு வெடிகுண்டு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் அய்யனாம் பாளையம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சதீஷ் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் அனைவரும் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்பொழுது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் தென்னமாதேவி பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் கொடுவா என்கின்ற சந்தோஷ் (வயது 40) தன் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை திடீரென்று மது அருந்திய இடத்தில் நடுவிலே வீசியதால் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தரணிதரன், முரளி, மகேஷ், தாமோதரன், கர்ணன், அஸ்லாம் உள்ளிட்ட ஆறு நபர்களும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்த்தபினர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான காவல் துறையினர் நாட்டு வெடிகுண்டு வீசிய கொடுவா சந்தோஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் காயம் பட்ட அனைவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வெடிகுண்டு


வெடிகுண்டு (bomb) என்பது வெடிபொருளின் வெப்பம் உமிழ்கின்ற வேதியியல் எதிர்வினையைச் சார்ந்து வெடிக்கும் நிலையிலுள்ள கருவிகள் ஆகும். இது வெடிக்கும்போது உடனடியாக வன்முறையான முறையில் ஆற்றலை வெளிப்படுத்தும். வெடிகுண்டு என்ற சொல் கிரேக்க சொல்லான βόμβος (பாம்போஸ் ) என்பதிலிருந்து வந்ததாகும். ஆங்கிலத்தில் உள்ள "பூம்" என்ற சொல்லும் ஏறக்குறைய இதே அர்த்தத்தில் உள்ளது. ஒரு அணு ஆயுதம் வேதியியல் அடிப்படையிலான வெடிபொருட்களுடன் பயன்படுத்தப்பட்டு அணு சார்ந்து மிகப்பெரிய அளவில் வெடிக்கிறது.


கட்டுமானம் அல்லது சுரங்கம் போன்ற பொதுத்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் பொதுவாக "வெடிகுண்டு" என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதில்லை. எனினும் அப்பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் அவற்றை வெடிகுண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தில் "வெடிகுண்டு" என்ற சொல்லையும் குறிப்பாக வானிலிருந்து குண்டு போடுதலுக்கு வான்வழி வெடிகுண்டு (aerial bomb) என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றனர். விமானப்படைகள், கடற்படைகள் போன்றவற்றில் ஆற்றலில்லாத வெடிக்கும் ஆயுதங்கள் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றது. எறிகுண்டுகள், குண்டுகள், ஆழ்வெடிகுண்டுகள் (நீரில் உபயோகிக்கப்படுகிறது), ஏவுகணைகளின் முனையிலிருக்கும் வெடிபொருட்கள் அல்லது நிலக்கண்ணி வெடிகள் போன்ற இராணுவத்தில் பயன்படும் வெடிக்கும் ஆயுதங்கள் "வெடிகுண்டுகள்" என வகைப்படுத்தப்படுவதில்லை. பொதுவாக மரபு சாராப் போர்களில், வரையரையற்ற முறையில் பயன்படுத்தப்படும் வெடிக்கும் உபகரணங்களை அல்லது தாக்கக்கூடிய ஆயுதங்களை "வெடிகுண்டு" எனக் குறிப்பிடலாம்.