விழுப்புரம் : திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் ஆண்டவர் மெடிக்கல் இயங்கி வருகிறது. இந்த ஆண்டவர் மெடிக்கலை திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக் பாஷா நடத்தி வருகிறார்.


இந்த நிலையில் ஆண்டவர் மெடிக்கல் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் திண்டிவனம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் சாதிக் பாஷா நடத்தி வரும் மெடிக்கலில் விசாரணை மேற்கொண்டனர்.  சாதிக் பாஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.




இதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுக்கா பகுதியில் மருத்துவம் படிக்காமலே பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரம்மதேசம், வெம்பாக்கம்,  தூசி உள்ளிட்ட பகுதியில் சோதனை செய்தபோது பிரம்மதேசம் கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமலேயே சுரேஷ் பாபு (வயது 43) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது.


இதுகுறித்து மருத்துவர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவரான சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது போலி மருத்துவர்களை கலையடுக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண