விழுப்புரம்: நானும் ஜெயிலுக்கு போறேன், நானும் ஜெயிலுக்கு போறேன் என்ற திரைப்படபாணியில் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்த பல்வேறு வழக்கு குற்றவாளிகள் பிரபலமாக சரண்டைந்த குற்றவாளியின் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பத்தை சார்ந்த ரவுடியான ஜமால் என்பவர் மீது புதுச்சேரி,கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் செயல்படும் கடைகளில் ரவுடியான ஜமால் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பாதிப்படைந்த வணிகர்கள் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஜமால் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமாலை சரணடைய கூறிய நிலையில் ஜமால் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைவதற்கு முன்பு தான் பிரபலமடைய வேண்டும் என்பதால் தனது ஆதரவாளர் ஒருவரை வைத்து சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட கூறியுள்ளார். அதன் படி ஜமால் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு ஜெயிலுக்கு போவதை நானும் ஜெயிலுக்கு போறேன் நானும் ஜெயிலுக்கு போறேன் நான் ரவுடி தான் என்று கூறியிருப்பார். அதேபோல் இன்று ரவுடி சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்