விழுப்புரம்: விழுப்புரத்தில் மது அருந்த பணமில்லாததால் இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்களை தாலுகா போலீசார் கைது செய்து 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள காவனிப்பாக்கத்தில் கடந்த 23.05.2023 ஆம் தேதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக அப்பகுதியை சார்ந்த பிரகாஷ் என்பவர் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் விழுப்புரம் நகர பகுதியில் மது அருந்த பணமில்லாததால் மூன்று இளைஞர்கள் இணைந்து பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கிருபாகரன் சஞ்சய் பிரபாகரன், அஞ்சத்கான் ஆகிய மூன்று நபரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆறு இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்ததாக இளைஞர்கள் தெரிவித்துள்ளதால் அதனை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்