விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் திரெளபதியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் இன்று திரெளபதி அம்மன் கோவில்  தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தீமிதி திருவிழாவின் போது பட்டியலின சமூகத்தை சேர்ந்த கந்தன், கதிரவன் கற்பகம் குடும்பத்தினர் கோவிலில் சென்று சாமிதரிசனம் செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் உள்ளே வந்து சாமி தரிசனம் செய்யக்கூடாது வெளியிலையே நின்றுவிட்டு சாமியை கும்மிடுவிட்டு போங்கள் என கூறி சிலர் கந்தன், கதிரவனை கற்பகம் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் காயங்கள் ஏற்படவே மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை  பெற்றுவருகின்றனர்.


இந்நிலையில் பட்டியலினத்தை சார்ந்த எங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மேல் பாதி கிராமத்தை சார்ந்த பட்டியலின மக்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் மேல்பாதி என்னுமிடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக கும்பகோனம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது தாக்கு நடத்தியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறியதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதைதொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று  (8.4.2023) பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சாலைமறியலில் ஈடுபட்ட தரப்பினரையும், மேல்பாதி கோவில் திருவிழா கமிட்டியையும் அழைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கு 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வளவனூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. சமாதான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது.