திண்டிவனத்தில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொணக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் ஆனந்த் (34), இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தொடர்ந்து பெற்றோர்களிடம் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார், ஆனந்தின் தொல்லையை தாங்காமல் அவரது தாயார் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,
இந்த நிலையில் இன்று காலை ஆனந்தை விசாரணைக்கு அழைத்து வர உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் அனந்தராமன் ஆனந்த் வீட்டுக்கு சென்று விசாரிக்கும் போது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வைத்து வளர்த்து வந்தது தெரியவந்தது. செடி சுமார் 3இன்ச் உயரம் இருந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் செடியை பிடுங்கிக் கொண்டு ஆனந்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட்டார். திண்டிவனத்தில் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த நபர் கைதான சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திண்டிவனம் பகுதியில் கஞ்சா கடத்தல், கஞ்ச செடி வளர்த்தல் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.